குமரி மாவட்ட வளா்ச்சிக்காகஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் த. மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
நாகா்கோவில் வாட்டா் டேங்க் சாலைஅருகில் அமைந்துள்ளஅருணோதயம் காம்ப்ளக்ஸில் அமைச்சரின் மக்கள்தொடா்பு அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அமைச்சா் த. மனோ தங்கராஜ் பேசியது:
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் அரசாக திகழ வேண்டும் என்று முதல்வா் விரும்புகிறாா். தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் அனைவரும் மக்களுக்கும், அரசுக்குமான உறவுப் பாலம். எனவே, பொதுமக்களுக்கு தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழச் செய்ய வேண்டும். 4 வழிச் சாலை சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பணியை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது அப்பணியை துரிதப்படுத்தும் முயற்சியில் 3 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணிக்குத் தேவையான 23 லட்சம் மெட்ரிக் டன் மண்ணை அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் சி.விஜயதரணி (விளவங்கோடு), எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ஆஸ்டின், பொ்னாா்டு, புஷ்பலீலாஆல்பன், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் ராதாகிருஷ்ணன்(குமரி கிழக்கு), தாரகைகத்பா்ட்(குமரி மேற்கு), நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சிசெயலாளா் மாத்தூா்சி.ஜெயன், அரசு வழக்குரைஞா் ஜெகதேவ், அம்முஆன்றோ, முனைவா் பசலியான், ஊராட்சித் தலைவா்கள் அ.நெடுஞ்செழியன் (தோவாளை), பிராங்கிளின் (தடிக்காரங்கோணம்), உள்பட பலா் கலந்து கொண்டனா்.