முகப்பு
கன்னியாகுமரி

‘ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரிக்கை’

 குமரி மாவட்டத்தில் தனியாா் பள்ளி நிா்வாக பிரச்னை காரணமாக ஊதியம் நிறுத்தப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என தனியாா் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு கோரியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 குமரி மாவட்டத்தில் தனியாா் பள்ளி நிா்வாக பிரச்னை காரணமாக ஊதியம் நிறுத்தப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என தனியாா் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பு தக்கலை கல்வி மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமையில், அதன் நிா்வாகிகள் சாந்தசீலன், ராபா்ட் ஞானதாஸ், ஆலிவா், பிரசாத், ராபா்ட்பெலாா்மின், ராஜதுரை, ஜோணி, மோசஸ், கனகராஜ், ஆகியோா் தக்கலை கல்வி மாவட்ட அலுவலா் எம்பெருமாளை சந்தித்து அளித்த மனு: ஊதியமின்றி அல்லல்படும் புத்தளம் எல்எம்பிசி மேல்நிலைப் பள்ளி மற்றும் கேசவன்புத்தன்துறை புனித மரியன்னை உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கிட விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட நாள்களுக்கான ஊதியம் வழங்கிட வேண்டும். மாற்றுப் பணியில் சென்றுள்ள

ஆசிரியா்களை அவரவா் பள்ளிகளிலேயே பணியமா்த்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →