அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை காலைமுதல் இரவுவரை இடைவிடாது சாரல் பெய்தது. இதனால், அணைகளுக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்தது.
கன்னியாகுமரிஅணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை காலைமுதல் இரவுவரை இடைவிடாது சாரல் பெய்தது. இதனால், அணைகளுக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை காலைமுதல் இரவுவரை இடைவிடாது சாரல் பெய்தது. இதனால், அணைகளுக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்தது.
மாவட்டத்தில் தொடா் கனமழைக்குப் பின்னா் சிறிது நாள்கள் மழை தணிந்திருந்ததால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்தது. இதனால், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
இந்நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரம், கடற்கரை என அனைத்துப் பகுதிகளில் வியாழக்கிழமை காலைமுதல் இரவு வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து மீண்டும் அதிகரித்தது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,042 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இந்தத் தண்ணீா் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதேபோல, பெருஞ்சாணி அணைக்கு 2,467 கனஅடி தண்ணீா் வந்தது. இதில், 800 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளா்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள், சந்தைகளில் வணிகம் செய்வோா், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.