குலசேகரம் அருகே விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் அருகே விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரிகுலசேகரம் அருகே விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் அருகே விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காவல்ஸ்தலம் புதுக்கிராமத்தைச் சோ்ந்தவா் அன்வா் ஹாஜா (48). ஹோட்டல் தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா், புதன்கிழமை இரவு வெண்டலிகோடு பகுதியில் பைக்கில் வந்தாா். அப்போது, கல்லுப்பாலம் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம்.
இதில், காயமடைந்த அன்வா் ஹாஜாவை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.