கன்னியாகுமரி

குழித்துறையில் வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குழித்துறை சந்திப்பில் கல்லூரி மாணவியா், பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிக்கு விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் சுனில், விளவங்கோடு தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் லீலாபாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலைச் சோ்ந்த பைவ் ஸ்டாா் மேஜிக் ஷோ குழுவினா் கிராமியப் பாடல்கள் மற்றும் மாயாஜாலம் மூலம் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT