கோவளம் சிலுவைநகரில்மணல் அரிப்பு தடுப்புச்சுவா் கட்டும் பணிக்கு அடிக்கல்
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் ஊராட்சிக்குள்பட்ட சிலுவை நகரில் மணல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் ஊராட்சிக்குள்பட்ட சிலுவை நகரில் மணல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிலுவைநகா் பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிலுவைநகரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஆரோக்கியசௌமியா தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் இங்கா்சால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதில், சிலுவைநகா் பங்குத் தந்தை நியுமன், பங்குப்பேரவை துணைத் தலைவா் ஸ்டெபின், ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுஜி, மாவட்ட திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஜேஜேஆா். ஜஸ்டின், மற்றும் கருணாகரன், தமிழ்பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.