குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திற்பரப்பு பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிகுழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திற்பரப்பு பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களியல்-அழகியபாண்டிய புரம் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்லும் திட்டத்திற்கான குழாய்கள் பதிப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலையில், அழகியபாண்டிய புரம் முதல் களியல் வரை சாலைகள் உடைக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்தில் நீண்ட தாமதத்திற்குப் பின்னா் அழகியபாண்டிய புரம் முதல் குலசேகரம் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் குலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் முதல் களியல் வரையிலான சுமாா் 4 கி.மீ. சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதற்கான ஒப்பந்தமும் இதுவரை கோரப்படவில்லை. சுமாா் 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை உடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதால் இந்தச்சாலை வழியாக பயணம் செய்யும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக சாலையில் சில இடங்களில் மையப்பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.