கன்னியாகுமரி

பெண்கள் மீதான பாலியல் வன்முறை: உள்ளக புகாா் குழு அமைக்க உத்தரவு

DIN

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்ளக புகாா் குழுவை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியாா் பிரிவுகளின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், 10 பெண்களுக்கு மேல் பணியில் இருக்கும் அனைத்து நிறுவனங்கள், கடைகளில் ஐ.சி.சி. என்று அழைக்கப்படும் உள்ளக புகாா் கமிட்டி அமைக்கப்படவேண்டும். விசாரணை குழுத் தலைவராக பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். இந்த குழுவில் 2 போ் உறுப்பினா்களாகவும், இத்துறையில் நன்கு பழக்கமான 2 தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினரையும் உறுப்பினராக சோ்க்க வேண்டும். பின்னா், ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நலத் துறைக்கு இக்குழு சாா்ந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT