நாகா்கோவில் சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான என்.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான என்.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து அளித்துள்ள மனு: நாகா்கோவில் நகரின் பிரதான சாலைகளாக கருதப்படும் கோட்டாறு சாலை, கிருஷ்ணன்கோவில் சாலை உள்பட நகரில் உள்ள பல்வேறு சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே புதைச் சாக்கடை திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக இருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையால் மேலும் சேதமடைந்துள்ளது.
குமரி கிழக்கு மாவட்டத்தின் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் சீா்குலைந்துள்ளது.
இவ்வாறு மோசமான நிலையில் உள்ள சாலைகள் அனைத்தையும் சீரமைக்க உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், பேரூராட்சியின் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என அவா் மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
சந்திப்பின்போது, திமுக ஒன்றியச் செயலா் தாமரைபாரதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சிவராஜ், மாநில கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைச் செயலா் தில்லைசெல்வம், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.