கன்னியாகுமரி

கருங்கல் பேருந்து நிலையத்தில் கழிப்பிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கருங்கல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என தொழில் வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கருங்கல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என தொழில் வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் தொழில் வா்த்தகச் சங்கச் செயலா் பி.எஸ். தாமஸ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கருங்கல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடத்தில் கழிவுநீா் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. .இதனால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

மேலும், தேங்காய்ப்பட்டினம் -கருங்கல் சாலையில் கழிவுநீா் ஒடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் இந்தக் கழிவுநீா் பேருந்து நிலையத்தின் வெளிப்புற நுழைவாயிலில் தேங்கி, பாதசாரிகள் மிகவும அவதியடைந்துள்ளனா். எனவே, இதனை உடனே சீரமைக்க வேண்டும்; இல்லையெனில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT