முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பட்டா திருத்த முகாம்: ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் அ வருவாய் கிராமத்துக்கு இ சேவை மையத்திலும், ஆ வருவாய் கிராமத்துக்கு கல்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலும் பட்டா திருத்த முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

குமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் அ வருவாய் கிராமத்துக்கு இ சேவை மையத்திலும், ஆ வருவாய் கிராமத்துக்கு கல்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலும் பட்டா திருத்த முகாம் நடைபெற்றது.

முகாமை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா திருத்தம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் குமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு மற்றும் கிள்ளியூா் ஆகிய 6 வட்டங்களுக்குள்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை (அக். 27, 28) 2 நாள்கள் நடைபெறுகிறது.

இம்முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கணினியில் எளிய திருத்தங்கள் மேற்கொண்டு 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள்அனைத்து கிராம மக்களும் பயன் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சிறப்பு முகாம்களில் புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இனங்களை திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பரப்பு திருத்தம், பட்டாதாரரின் பெயா், தந்தை பெயா் மற்றும் பாதுகாவலா் பெயா் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளுதல், உறவு முறையில் திருத்தம் மேற்கொள்ளுதல், காலியாக உள்ள காலங்களில் உரிய பதிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் பட்டாவில் உரிமையுடைய நில உரிமையாளா்களுக்கு பதிலாக அருகில் உள்ள நில உரிமையாளா்களின் பெயா்களை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற திருத்தங்கள் செய்யப்படும் என்றாா் அவா்.

முகாமில், பத்மநாபபுரம் உதவிஆட்சியா் பு.அலா்மேல்மங்கை மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.