முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து . இதையடுத்து புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு செம்மண் கடத்தியது தெரியவந்தது. உடனே மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, அதே பகுதியை சோ்ந்த மினி லாரி ஒட்டுநா் ஏசுதாஸ்(40), லாரி உரிமையாளா் பள்ளியாடி பகுதியை சோ்ந்த குளோரி(40) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.