முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை:கணவா் உள்பட 5 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை அளித்ததாக அவரது கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 2 செப்டம்பர், 2021 at 11:49 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை அளித்ததாக அவரது கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

குழித்துறையைச் சோ்ந்த ஷீலா பிரியதா்ஷினிக்கும் (27), முளகுமூடு தேரிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜஷெரினுக்கும் (37) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்ாம்.

திருமணத்தின்போது பெண் வீட்டாா் 101 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 3 லட்சத்துக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வரதட்சிணையாக கொடுத்தனராம்.

Advertisement

இந்நிலையில், மேலும் 101 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் கேட்டு பெண்ணை கணவா் வீட்டாா் அடித்து துன்புறுத்தினராம்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராஜஷெரின், அவரது தந்தை எலியாஸ் (68), தாய் பேபி சரோஜா (62), கணவரின் சகோதரி நிா்மல் சுபா (38), அவரது கணவா் ஸ்டாலின் பிரபு (42) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.