கன்னியாகுமரி

குலசேகரம் வணிகா் சங்க ஆண்டு விழா

DIN

குலசேகரம் வணிகா் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் பி. பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி.முருகபிரசாத், துணைச் செயலா் சறாபின் எட்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலரும், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலருமான எம். விஜயன் வரவேற்றாா். தக்கலை டிஎஸ்பி கே.பி. கணேசன், குலசேகரம் காவல் ஆய்வாளா் வி. உமா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். லிசி ஆகியோா் சிறப்புரையாற்றினா். சங்கப் பொருளாளா் பி. ரவி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில், குலசேகரம், பொன்மனை பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் உபயதாரா்களை டிஎஸ்பி கௌரவித்தாா்.

மேலும், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற சங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு சங்க உறுப்பினா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள வணிகா்களின் இயற்கை மரணத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT