மாத்தூா் தொட்டி பாலத்தில் இளைஞா் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து தனியாா் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரிமாத்தூா் தொட்டி பாலத்தில் இளைஞா் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து தனியாா் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து தனியாா் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியைச் சோ்ந்த போஸ் மகன் ஜெகதீஸ் சந்திரபோஸ் (38). ஸ்டெம்செல் டெக்னீசியன். இவா் சுவாமியாா்மடம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜில்னா பிரியங்கா (32) , இதே மருத்துவமனையில் ஸ்டெம்செல் பிரிவில் பணிசெய்து வருகிறாா். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
ஜெகதீஸ் சந்திரபோஸூக்கு கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை காலையில், மோட்டாா் சைக்கிளில் மனைவியை வேலைக்கு கொண்டு விட்டு வந்துள்ளாா். பின்னா் மனைவிக்கு ‘என்னை மன்னித்து விடு’ என செல்லிடப் பேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். இதையடுத்து மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு சென்ற அவா்
அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.