கன்னியாகுமரி

நூருல் இஸ்லாம் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தக்கலை: குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், பத்மநாபபுரம் அரசு அரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை

கல்லூரியின் தாளாளா் ஏ.பி. மஜீத்கான் தொடங்கி வைத்தாா். முதல்வா் எஸ். பெருமாள் முன்னிலை வகித்தாா். மருத்துவா் லாரன்ஸ் விக்டா் ஜோ தலைமையில் மருத்துவக் குழுவினா் குமாரகோவில், பிரம்மபுரம், தென்கரை, புலியூா்குறிச்சி, காரவிளை, ஆசான்கிணறு, குன்றக்கரை, தக்கலை பகுதியிலுள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி

செலுத்தினா். ஏற்பாடுகளை திட்ட அலுவலா்கள் ஸ்ரீஜித், சசிகலா, இந்திரா, தேசிய மாணவா் பாதுகாப்பு படை அலுவலா் ஸ்ரீதேவ் , மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT