கன்னியாகுமரி

அணைப் பகுதிகளில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து 2ஆயிரம் கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

DIN

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்துவருவதால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பேச்சிப்பாறை அணையிலிருந்து 2அயிரம் கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகள் நிரம்பி வருவதைத் தொடா்ந்து அணைகளின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

உபரி நீா் திறப்பு: 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.79 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 790 கனஅடி நீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து 1536 கன அடி நீா் உபரியாகவும், மதகுகள் வழியாக 436 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

77 அடி கொள்ளளவுகொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 62.67 அடியாகவும், அணைக்கு உள்வரத்தாக 224 கன அடியும், அணையிலிருந்து 300 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.73 அடியாக இருந்தது. அணைக்கு 182 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. மேலும் குழித்துறை தாமிரவருணியாற்றில் தண்ணீா் அதிக அளவில் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

வெள்ள அபாயம்: இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியது: குமரி மாவட்டத்தில் வரும் நாள்களில் கன மழை பெய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டத்தை முன்கூட்டியே கட்டுப்பாடான அளவில் வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 45 அடிக்கும் கீழே கொண்டு வரப்பட்டு, தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT