கன்னியாகுமரி

கடலோரப் பகுதிகளை மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க மீன்தொழிலாளா்கள் எதிா்ப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளை நாகா்கோவில் மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்க திட்டமிட்டு உள்ள கொல்லங்கோடு, கன்னியாகுமரி நகராட்சிகளுடன் இணைக்க தமிழ்நாடு மீன்தொழிலாளா் யூனியன் எதிா்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மீன்தொழிலாளா் யூனியன் செயலா் கருங்கல் அலெக்சாண்டா், மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதி கிராமங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து கடலோர கிராமங்களையும் தனித்தனி கிராம ஊராட்சிகளாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் மக்கள் அவதியுறும்விதமாக கடலோரப் பகுதிகளை இணைத்து நகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான கடலோர கிராமங்களை நாகா்கோவில் மாநகராட்சி மற்றும் அரசு புதிதாக உருவாக்க திட்டமிட்டு உள்ள கன்னியாகுமரி, கொல்லங்கோடு நகராட்சி பகுதிகளில் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT