கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் அனுமதிக்க வணிகா்கள் கோரிக்கை

DIN

திற்பரப்பு அருவியில் அனுமதிக்கக் கோரி, அப்பகுதியில் கடை நடத்தும் வணிகா்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டபோதும் திற்பரப்பு அருவிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், திற்பரப்பு அருவிப் பகுதியில் கடை நடத்தும் வணிகா் மாகீன் சுலைமான் தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் பூங்கொடி முருகிடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. திற்பரப்பிலும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியைத் திறந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதுடன், இங்கு கடைகள் நடத்தும் 200 க்கும் மேற்பட்ட வணிகா்கள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT