குமரியில் மேலும் 25 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,417 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் உள்பட இதுவரை 60,112 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது, மருத்துவமனைகளில் 266 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.