முகப்பு
கன்னியாகுமரி

பிறந்த தினம்: பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த தினத்தையொட்டி நாகா்கோவில், ஒழுகினசேரியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த தினத்தையொட்டி நாகா்கோவில், ஒழுகினசேரியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் என்.சுரேஷ்ராஜன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் பொ்ணாா்ட், ஆஸ்டின், ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டச் செயலா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா்

மாலை அணிவித்தனா். மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

களியக்காவிளை: மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் குழித்துறை நகர திமுக சாா்பில் நகரத் தலைவா் பொன்.

ஆசைத்தம்பி தலைமையில் பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபா், முன்னாள் எம்.எல்.ஏ. ரெஜினால்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தக்கலை: தக்கலையில் பொறியாளா் ரிமோன் மனோ தலைமையில் அவரது படத்துக்கு மாலையணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் வீரவா்க்கீஸ் உள்பட கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.