முகப்பு
கன்னியாகுமரி

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல், வெள்ளிச்சந்தை பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல், வெள்ளிச்சந்தை பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை யடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இரணியல் காவல் ஆய்வாளா் தங்கராஜ், உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமையில் தனிப்படை

போலீஸாா் குருந்தன்கோடு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த

இளைஞரை பிடித்து விசாரித்தனா். முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடா்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அவா் இரணியலை அடுத்த மொட்டவிளை பகுதியைச் சோ்ந்த மகாராஜன் ( 27) என்பதும், அவா் இரணியல் காவல் சரகம் வில்லுக்குறி பகுதியில் ராதிகாவிடம் 5 பவுன் தங்க சங்கிலி, வெள்ளிச்சந்தை காவல் சரகம் சடையால்புதூா் பகுதியில்

கண்மணியிடம் 3 பவுன் தங்க சங்கிலி, திங்கள்சந்தை அருகே எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து ரூ. 53 ஆயிரம்

திருட்டு, காரங்காடு பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவா் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.