ராஜாக்கமங்கலம் அருகே 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ராஜாக்கமங்கலம் அருகே கேரளத்துக்கு கடத்துவதற்கா பதுக்கி வைத்திருந்த 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் அருகே கேரளத்துக்கு கடத்துவதற்கா பதுக்கி வைத்திருந்த 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அழிக்கால் கிராமத்தில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை வட்டாட்
சியா் அப்துல்லா மன்னான், தனி வருவாய் ஆய்வாளா் ரதன் ராஜ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை
அப்பகுதிக்கு சென்று ஆய்வுமேற்கொண்டனா்.
அப்போது, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சிறிய மூட்டைகளில் 3,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து குளச்சல் உடையாா்விளையிலுள்ள
அரசு கிடங்கியில் ஒப்படைத்தனா். விசாரணையில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.