கன்னியாகுமரி

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாகா்கோவிலில் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி, எஸ்ஆா்இஎஸ், எப்ஐஆா் ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு ரூ. 6 லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வேலை இழப்பு அதிகரிக்கும்.

15 ரயில்வே விளையாட்டு மைதானங்களை விற்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றாா்அவா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் தங்கம் நடேசன், உதயகுமாா், சுப்பிரமணியன், கண்ணன், செல்லத்துரை, தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT