முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 25 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61578ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 36 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 60,238ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 299 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இரு மருத்துவா்களுக்கு கரோனா: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவா்கள் 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.