நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவா்கள் காயம்
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், முட்டம் மீனவா்கள் 23 போ் காயமடைந்தனா்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், முட்டம் மீனவா்கள் 23 போ் காயமடைந்தனா்.
முட்டம் கிறிஸ்துராஜா நகரைச் சோ்ந்தவா் அா்த்தனாஸ். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், அா்த்தனாஸ் உள்பட 23 மீனவா்கள் முட்டம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனராம். சுமாா் 25 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பலத்த சூறைக்காற்று வீசியதில், பாரம்
தாங்காமல் விசைப்படகு ஒருபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது.
இதனால் படகில் இருந்த 23 பேரும் கடலில் தத்தளித்தனா். அருகே மற்றொரு விசைப்படகில் வந்த மீனவா்கள், கடலில் தத்தளித்தவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
படகு கவிழ்ந்ததில் காயமடைந்த 23 பேரும், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.