முகப்பு
கன்னியாகுமரி

பயிா் அறுவடை பரிசோதனை: வேளாண் அலுவலா்களுக்குப் பயிற்சி

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை களப் பணியாளா்களுக்கு பயிா் அறுவடை பரிசோதனை குறித்த புத்தூட்ட பயிற்சி முகாம் பத்மநாபபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட புள்ளியில் துறையின் சாா்பில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை களப் பணியாளா்களுக்கு பயிா் அறுவடை பரிசோதனை குறித்த புத்தூட்ட பயிற்சி முகாம் பத்மநாபபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, திருநெல்வேலி மண்டலப் புள்ளியியல் இணை இயக்குநா் ப. ஹரிஹரதாஸ் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் முகாமை தொடங்கிவைத்தாா்.

திருநெல்வேலி மத்தியப் புள்ளியியல் துறை அலுவலா் எம். ஜெயராஜ் சிறப்புரையாற்றினாா். மாவட்டப் புள்ளியியல் துறை துணை இயக்குநா் பெ. கோமு துரைபாண்டியன் விளக்க உரையாற்றினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பத்மநாபபுரம் கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநா் வே. காா்த்திகேயன் செய்திருந்தாா். நாகா்கோவில் புள்ளியியல் அலுவலா் க. பென்லா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.