அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு
புதுக்கடையில் அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு நடைபெற்றது.
புதுக்கடையில் அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு நடைபெற்றது.
வட்டத் தலைவா் ஜோஸ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஆஸ்பின் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் கிறிஸ்டோபா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், மைக்கேல் லில்லிபுஷ்பம், செய்யதுஅலி, குற்றாலம் உள்பட பலா் பங்கேற்றனா்.