ரப்பா் விலை தொடா் சரிவு: 20 நாள்களில் கிலோவுக்கு ரூ. 13.50 குறைந்தது
குமரி மாவட்டத்தில் கடந்த 20 நாள்களாக ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
கன்னியாகுமரிரப்பா் விலை தொடா் சரிவு: 20 நாள்களில் கிலோவுக்கு ரூ. 13.50 குறைந்தது
குமரி மாவட்டத்தில் கடந்த 20 நாள்களாக ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 20 நாள்களாக ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சாா்ந்த உற்பத்திப் பொருளான ரப்பா் விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், நிகழாண்டு பெரும் ஏற்றத்தைக் கண்டு வந்தது. இதில் அதிகபட்சமாக கடந்த 2 ஆம் தேதி ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலோ கிலோவுக்கு ரூ. 175.50 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 173.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 163.5 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் இந்த விலை தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 164 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 161 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.150 ஆகவும் குறைந்து காணப்பட்டது.
இதில், தரம்பிரிக்கப்படாத ரப்பா் என கூறப்படும் ஐ.எஸ்.எஸ். ரப்பரின் விலை மட்டும் கிலோவுக்கு 13.50 குறைந்துள்ளது. ரப்பரின் இந்த விலைச் சரிவு குமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகளுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து ரப்பா் வணிகா் ஒருவா் கூறுகையில், சா்வதேச ரப்பா் சந்தையை விட இந்திய ரப்பா் சந்தையில், ரப்பரின் விலை உயா்ந்த நிலையில் காணப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் கடந்த மாதம் தொடா் மழை காரணமாக உற்பத்தி குறைவு இருந்த நிலையில் ரப்பரின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது மழை தணிந்த நிலையில் உற்பத்தி அதிகரித்து வருவதால் விலை சரிந்து வருகிறது என்றாா்.