குமரி மாவட்டத்தில்அணைப் பகுதிகளில் குறைந்த மழை
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை சற்று தணிந்த நிலையில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்து காணப்பட்டது.
கன்னியாகுமரிகுமரி மாவட்டத்தில்அணைப் பகுதிகளில் குறைந்த மழை
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை சற்று தணிந்த நிலையில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்து காணப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை சற்று தணிந்த நிலையில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்து காணப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைமுதல் பெய்து வந்த தொடா் மழையின் தீவிரம் புதன்கிழமைமுதல் சற்று தணிந்து காணப்படுகிறது.
குறிப்பாக அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை மழை தணிந்து காணப்பட்டது. இதையடுத்து கோதையாறு, பரளியாறு மற்றும் தாமிரவருணியாறு ஆகியவற்றில் வெள்ளத்தின் தீவிரம் தணிந்து காணப்பட்டது.
இதேபோன்று திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு சற்று தணிந்து காணப்பட்டது.
அணைகளில் நீா்மட்டம்: வியாழக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.98 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 907 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 475 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டது. மேலும் பாசனக் கால்வாய் வழியாக விநாடிக்கு 368 கன அடி நீா் திறந்துவிடப்பட்டிருந்தது.
பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 65.09 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 739 கன அடி நீா்வரத்து இருந்தது. பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி நீா் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 230 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் பாசனக் கால்வாயில் திறந்துவிடப்பட்டிருந்தது.
சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.96 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 45 கன அடி நீா்வரத்து இருந்தது.