கன்னியாகுமரி

களியக்காவிளை, கருங்கல் பகுதியில் மழை

DIN

களியக்காவிளைசுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

இப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் இரு நாள்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னா் பகலில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை வானத்தில் மழை மேகம் சூழ்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி, சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னா் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடா்ந்து இப் பகுதியில் சாரல் மழை பெய்தது. களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியான படந்தாலுமூடு, குழித்துறை, குளப்புறம், மேக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

இதே போல், கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியா விளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, காட்டுக்கடை, காக்க விளை, கருமாவிளை, கப்பியறை, செல்லங்கோணம், பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், முள்ளங்கனா வளை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்ததது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT