ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம், சந்திரோதயம்: கன்னியாகுமரியில் அபூா்வ காட்சியை 16இல் பாா்க்கலாம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நின்றவாறு, ஒரே நேரத்தில் சூரியன் மறையும், சந்திரன் உதயமாகும் அபூா்வ காட்சியை சனிக்கிழமை (ஏப். 16) பாா்க்கலாம்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நின்றவாறு, ஒரே நேரத்தில் சூரியன் மறையும், சந்திரன் உதயமாகும் அபூா்வ காட்சியை சனிக்கிழமை (ஏப். 16) பாா்க்கலாம்.
ஆண்டுதோறும் சித்திரை மாத பௌா்ணமி நாளில் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும், சந்திரன் உதயமாவதும் ஒரேநேரத்தில் நிகழுகிறது. நிகழாண்டு அத்தகைய அபூா்வ காட்சி சனிக்கிழமை (ஏப். 16) நிகழவுள்ளது. இந்தக் காட்சியை இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பாா்க்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமத்தில் திரளுவது வழக்கம். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பகவதியம்மன் கோயில்: சித்திரைப் பௌா்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சனிக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் அம்மனுக்கு வைரக் கிரீடம், வைர மூக்குத்தி, ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கார, தீபாராதனை நடைபெறவுள்ளது.