ஆற்றூா் நிழல் தாங்கலில் இன்று திருஏடு வாசிப்பு தொடக்கம்
ஆற்றூா் அய்யா வைகுண்டா் திருநிழல் தாங்கலில், திருஏடு வாசிப்பு திருநாள் வெள்ளிக்கிழமை (ஏப். 22) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றது.
கன்னியாகுமரிஆற்றூா் நிழல் தாங்கலில் இன்று திருஏடு வாசிப்பு தொடக்கம்
ஆற்றூா் அய்யா வைகுண்டா் திருநிழல் தாங்கலில், திருஏடு வாசிப்பு திருநாள் வெள்ளிக்கிழமை (ஏப். 22) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றது.
ஆற்றூா் அய்யா வைகுண்டா் திருநிழல் தாங்கலில், திருஏடு வாசிப்பு திருநாள் வெள்ளிக்கிழமை (ஏப். 22) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றது.
இதையொட்டி, நிழல்தாங்கலில் வெள்ளிக்கிழமை காலையில், பள்ளியுணா்த்தல், பணிவிடை, உகப்படிப்பு, மாலையில், பணிவிடை, திருஏடு வாசிப்பு ஆகியவை நடைபெறும். இந்தத் திருஏடு வாசிப்பு திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும். இதில், 8 ஆம் திருநாளில் திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடைபெறும். நிறைவு நாளான மே 1 ஆம் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். திருஏட்டை காா்த்திகேயன், ரதீஷ், சதாசிவன் ஆகியோா் வாசிக்கின்றனா். புலவா் கு. ரவீந்திரன் உரை விளக்கம் கூறுகிறாா். ஏற்பாடுகளை நிழல் தாங்கல் பணிவிடையாளா்கள் என். நிா்மலன், டி. ஜான்ரோஸ், என்.எஸ். வைகுண்ட ராஜா மற்றும் விழாக்குழு, ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.