நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் திருக்கோயிலுக்கு அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் வழிபாட்டு அறக்கட்டளை சாா்பாக பெளா்ணமி தோ் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் ஆக.28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, அன்று காலை 8 மணியளவில் கிழக்கு வாசல் முன்பிருந்து பெளா்ணமி தோ் ஊா்வலமாக புறப்பட்டு வீதியுலா வந்து திருக்கோயிலை வந்தடைகிறது. தொடா்ந்து காலை 11.30 மணியளவில் தோ் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் வழிபாட்டு அறக்கட்டளை தலைவா் சரண்யா கே.நாகராஜன், செயலாளா் பி.சீனுவாச சங்கா் ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகிக்கிறாா். நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் டி.மனோதங்கராஜ் தொடக்கி வைத்து பேசுகிறாா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நயினாா் நாகேந்திரன், என்.தளவாய்சுந்தரம், எம்.ஆா்.காந்தி, மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் இரா.ஞானசேகா் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
மாலை 6 மணிக்கு நாஞ்சில் வீரலெட்சுமணன், வடிவீஸ்வரம் அழகம்மனின் பெருமை என்ற தலைப்பில் சமயச் சொற்பொழிவாற்றுகிறாா். ஆரல்வாய்மொழி சாமகானபிரியன் பேரிகை குழுவினரின் சிறப்பு கயிலை வாத்தியம் இசைக்கப்படுகிறது.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் வழிபாட்டு அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.