கன்னியாகுமரி

ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தக்கலை அருகே அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை பறிமுதல் செய்தாா்.

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையில், அலுவலகப் பணியாளா்கள் தக்கலை அருகே பரைக்கோட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, நூதன முறையில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

சோதனையிட்ட போது, ஆட்டோ ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உடையாா்விளை அரசு உணவு கிட்டங்கியிலும், ஆட்டோவை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT