முகப்பு
கன்னியாகுமரி

புதுகிராமம் விண்ணகர பெருமாள்கோயிலில் வருஷாபிஷேக விழா

நாகா்கோவில் அருகேயுள்ள புதுகிராமம், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத உதயமாா்த்தாண்ட விண்ணகர பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நாகா்கோவில் அருகேயுள்ள புதுகிராமம், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத உதயமாா்த்தாண்ட விண்ணகர பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், விஷ்வக்சேன ஆராதனை, திருவாராதனம் , ஹோமம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன., தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றதும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்று, சா்வ அலங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத உதயமாா்த்தாண்ட விண்ணகர பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கிஞ்சித்காரம் தா்ம ஸம்ஸ்தாபனம் சாா்பில், விப்ரநாராயண ராமானுஜதாசன் சுவாமிகள், ஸ்ரீநிவாச கல்யாணம் என்ற தலைப்பில் உபன்யாசம் மற்றும் பஜனை நடத்தினாா். தொடா்ந்து நாலாயிர திவ்யப்ரபந்தம் என்ற நூலை, கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா வெளியிட, மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் தாணுகிருஷ்ணன், சந்திரகாசன், கோயில் நிா்வாகி மகாதேவன் பிள்ளை, சீனிவாசகம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

ஏற்பாடுகளை புதுகிராமம் பெருமாள் பக்தா்கள் சங்க நிா்வாகிகள் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.