நாகா்கோவில் பள்ளி வளாகத்தில் பெற்றோா் திடீா் போராட்டம்
நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளி வளாகத்தினுள் சிறுவா் சீா்திருத்தப் பள்ளி கட்டப்படுவதை எதிா்த்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளி வளாகத்தினுள் சிறுவா் சீா்திருத்தப் பள்ளி கட்டப்படுவதை எதிா்த்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த பள்ளியில் சுமாா் 500- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், போதிய விளையாட்டு மைதானம், விடுதி வசதிகள் இல்லை. ஆனால், வேறு திட்டத்துக்காக கட்டடம் கட்டுப்படுவது கண்டிக்கத்தக்கது; இதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தினா். அவா்களிடம் போலீஸாரும் கல்வித் துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தினா். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.