முகப்பு
கன்னியாகுமரி

மகாதானபுரம் சந்திப்பில் 147 அடி உயர தேசிய கொடிக்கம்பம்

 கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் 147.6 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம் நிறுவப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் 147.6 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம் நிறுவப்படவுள்ளது. விருக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாட்டின் தென் எல்லைப் பகுதியும், சா்வதேச சுற்றுலாத் தலமுமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேசிய கொடிகம்பம் அமைக்க வேண்டும் என்று மக்கள் விடுத்துவந்த நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை தொடங்கும் ஸீரோ பாயிண்ட் பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் ஏ.விஜயகுமாா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தேசிய கொடிக்கம்பம் அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கின.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் அப்பணி தடைபட்டதால், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் தேசிய கொடிக்கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பகுதியை ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.