முகப்பு
கன்னியாகுமரி

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: மக்கள் மறியல்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடக்கவிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடக்கவிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவட்டாறு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், 6 பேரூராட்சிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 300 பயனாளிகளுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டன. அதன்பேரில், அங்கு பயனாளிகள் , ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன் ஆகியோா் வந்தனா்.

இதனிடையே, தாலிக்கு தங்கம் வந்துசேரவில்லை என நாகா்கோவில் சமூக நலத்துறை அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்ததாம். இதனால், நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், பின்னா் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், அதிருப்தி அடைந்த மக்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், திருவட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கப்பெருமாள், போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →