முகப்பு
கன்னியாகுமரி

சிறுபான்மையினருக்கு தாமதமின்றி நல உதவிகள்: ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், சிறுபான்மையினா் நலத் துறையின் நல உதவிகளை மக்களுக்கு கால தாமதமின்றி வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், சிறுபான்மையினா் நலத் துறையின் நல உதவிகளை மக்களுக்கு கால தாமதமின்றி வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், தமிழக அரசின் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் சீ.சுரேஷ்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், உலமாக்கள் மற்றும் பணியாளா் நல வாரியம் சாா்பில் நலத் திட்டங்கள், உலமா பணியாளா்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை திட்டம், மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் நிா்வாக குழு உறுப்பினா்கள், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் நிா்வாக குழு உறுப்பினா்கள், டாம்கோ கடன் மற்றும் பயனாளிகளின் விவரம், பிரதமரின் ஜன்விகாஸ் காா்யக்ரம் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் வழங்க அனுப்பப்பட்ட வரைவு கடிதம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், இம்மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் கால தாமதமின்றி விரைந்து வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.