முகப்பு
கன்னியாகுமரி

கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் காவல் நிலையத்தில் முற்றுகை

கல்வித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கல்வித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டனா்.

நாகா்கோவில் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு மற்றும் கழிவறை தூய்மைப்படுத்தும் பணியில் 7 ஊழியா்கள் கடந்த 35 ஆண்டுகளாக ரூ. 105 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களை பணி நிரந்தரம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும் இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பணியாளா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனா். பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையும், அரசாணையையும் நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாறு காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு அளித்தனா். இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கோட்டாறு காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். இதனையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 2 நாள்களில் கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியதையடுத்து, அங்கு திரண்டிருந்த தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.