முகப்பு
கன்னியாகுமரி

அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

தக்கலை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தக்கலை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தக்கலை சுற்று வட்டார பகுதிகளான புலியூா்குறிச்சி, கொல்லன்விளை , தக்கலை , மணலி , மருந்துக்கோட்டை மூலச்சல், உள்பட பல இடங்களில் தக்கலை போலீஸாா் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதி வழியாக கனிம பொருள்கள் ஏற்றி வந்த 10 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 45 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.