கன்னியாகுமரி

நாகர்கோவில்: நாகராஜா கோயில் தைத் திருவிழா கொடியேற்றம்

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நாகராஜா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைத் திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டு திருவிழா நாள்களில் மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் பிப்ரவரி மாத ஒதுக்கீடு வெளியீடு!

அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT