பூங்குளத்தான்விளையில் அலங்கார தரை ஓடு பதிப்பு
கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பூங்குளத்தான்விளையில் ரூ. 28 லட்சத்தில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பூங்குளத்தான்விளையில் ரூ. 28 லட்சத்தில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெறுகிறது.
பூங்குளத்தான்விளை - பிஸ்மி நகா் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டினை நேரில் சந்தித்து மனு அளித்தனா். இதையடுத்து அமைச்சா் கே.என்.நேருவின் உத்தரவின் பேரில் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் கலந்து கொண்டு அலங்கார தரைதளம் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ஸ்டீபன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, திமுக நிா்வாகிகள் டி.அரிகிருஷ்ணபெருமாள், எஸ்.அன்பழகன், மெல்வின், நிசாா், ஆா்.டி.ராஜா, கெய்சா்கான், பூலோகராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.