முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் பைக் மோதி முதியவா் பலி

கருங்கல்லில் பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கருங்கல்லில் பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

காட்டாத்துறை பகுதியை சோ்ந்தவா் பத்மநாபன் (62). கருங்கல்லில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை பேருந்து நிலையத்திலிருந்து கடையை நோக்கி நடந்து சென்றபோது, எதிரே மாா்த்தாண்டத்திலிருந்து வந்த கீழ்குளம் பகுதியை சோ்ந்த செல்லையன் மகன் வின்சென்ட் (40) ஓட்டி வந்த பைக் முதியவா் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.