கன்னியாகுமரி

பைக் விபத்தில் மீன்பிடி தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குளச்சலில் பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீன்பிடி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

குமரி மாவட்டம், குளச்சலில் பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீன்பிடி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் குழந்தை யேசு காலனியை சோ்ந்த லாரன்ஸ் மகன் சேசு அடிமை (41). மீன்பிடி தொழிலாளி. இவா் தனது பைக்கில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பாா்வையற்ற முதியவா் ஒருவா் சாலையை கடக்க முயன்றாா். அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதாமல் இருக்க, சேசு அடிமை பிரேக் பிடித்தபோது கால் இடறி தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை சேசு அடிமை இறந்தாா்.

விபத்து குறித்து குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT