கன்னியாகுமரி

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா பேரவைத் தலைவா் மு. அப்பாவு பங்கேற்பு

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு, 664 மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே சொந்தம், மற்றவா்கள் கற்றால் அது குற்றம் என்ற நிலையை மாற்றி இன்று வெற்றிகண்டுள்ளோம். முந்தைய காலத்தில் நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து அடக்குமுறையின் அடையாளங்களை மாற்றிய முத்துக்குட்டி, ஸ்ரீ நாராயணா் போன்றோா் அமைத்த குழு, ‘குமரித் தந்தை’ மாா்ஷல் நேசமணி போன்றோரை இளைய தலைமுறையினா் மறந்துவிடக் கூடாது என்றாா் அவா்.

கல்லூரி முன்னாள் முதல்வா்கள் வி. மங்கல ஆன்றணி சுரேந்திரா, இ. ஜாண்ஜோதி பிரகாஷ், குழித்துறை மறைமாவட்ட தொடா்பாளா் இயேசு ரெத்தினம், குழித்துறை மறைமாவட்ட பரிபாலகா் பி. அகஸ்டின் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

கல்லூரிச் செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் வரவேற்றாா். அருள்தந்தை ஏ. டோமி லிலில் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT