தக்கலை ஒன்றியத்தில் ரூ.4.07 கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஊரகவளா்ச்சித்துறையின்சாா்பில், தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.4.07 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரகவளா்ச்சித்துறையின்சாா்பில், தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.4.07 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை செய்தியாளா்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
நுள்ளிவிளை ஊராட்சி, பேயன்குழி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில், நூலகத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டு வரும் காகிதக் கோப்பை மற்றும் தட்டு உற்பத்தி மையத்துக்கான கட்டட பணி, ரூ.17 லட்சம் மதிப்பில் நுள்ளிவிளை ஊராட்சி மன்ற சேவை மைய கட்டட முதல் தளத்தில் காகிதப் பை உற்பத்தி மையத்துக்கான கட்டட பணியை பாா்வையிட்டு, கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து கேட்டறிந்தாா். மேலும் பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து நுள்ளிவிளையில், பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாணுதாஸ் என்பவரின் வீடு கட்டும் பணி, ரூ.2.40 லட்சம் மதிப்பில் லாரன்ஸ் என்பவரின் வீடு கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் ரூ.48 லட்சம் மதிப்பில் மீன் வலை உற்பத்தி பிரிவு கட்டுமான பணி, ரூ.49 லட்சம் மதிப்பில் பூலான்கோட்டில் மீன் வலை தயாரிப்பதற்கான கட்டுமானப் பணி, ரூ.18 லட்சம் மதிப்பில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டும் பணி, ரூ.12.08 லட்சம் மதிப்பில் கீழ்கண்டன்விளை அரசு தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டட பணி, ரூ.23.57 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நுள்ளிவிளை ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி, ரூ.7 லட்சம் மதிப்பில் மாடத்தட்டுவிளையில் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
சடையமங்கலம் ஊராட்சியில் ரூ.1.16 கோடி மதிப்பில் தென்னை நாா்கொத்து அலகு கட்டுமானப் பணி, ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடிமக்கள் சேவை மையம் கட்டட பணியையும் நேரில் பாா்வையிட்டாா்.
முத்தலக்குறிச்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில், டிஜிட்டல்நூலக கட்டடம் கட்டும் பணி, ரூ. 42.50 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சியில் வாழை சிப்ஸ் பிரிவுக்கான கட்டட பணி, ரூ.20 லட்சம் மதிப்பில் வாழை மாவு அலகுக்கான கட்டட பணி, ரூ.13.95 லட்சம் மதிப்பில் தேன் மற்றும் பழச்சாறுக்கான கட்டட கட்டுமான பணி என மொத்தம் ரூ.4.07 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, செயற்பொறியாளா் ஏழிசைசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.