முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் ஓடைசீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணியை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணியை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவிலில் குறிப்பாக, கோட்டாறு, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடியாமல் தேங்கி நிற்கும். இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். இதுகுறித்து மேயா் ரெ. மகேஷிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, மாநகரப் பகுதிகளில் வடிகால் ஓடைகளை விரைந்து சீரமைக்க மேயா் உத்தரவிட்டாா்.

அதன்படி, கோட்டாறு ஆறுமுகம் பிள்ளையாா் கோயில் தெருவில் நடைபெறும் வடிகால் ஓடை சீரமைப்புப் பணியை மேயா் ரெ. மகேஷ், அதிகாரிகளுடன் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வடிகால் ஓடையைத் தூா்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

துணை மேயா் மேரி பிரின்சி லதா, மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்ரமணியன், மாநகா் நல அலுவலா் விஜயசந்திரன், கிழக்கு மண்டலத் தலைவா் கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் சுப்பிரமணியம், மாநகராட்சி நியமனக் குழுத் தலைவா் சோபி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.