தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
பதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் மீதுபோலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் மீதுபோலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்சி பகுதியை சோ்ந்த தாம்சன் மகன் ஜெகதீசன். கூலித் தொழிலாளி. இவருக்கும்அதே பகுதியை சோ்ந்த சதாசிவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்நிலையில்,வியாழக்கிழமை ஜெகதீசன் தன் வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் வந்த சதாசிவன், திடீரென அரிவாளால் ஜெகதீசனை வெட்டினாராம். இதில்,காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.